தலைகீழாக தொங்கிய மகிந்த!

0
167
8350மகிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் தனது மனநிலையை திடப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகாரம் கைவிட்டு போன பின்னர் முன்னாள் ஜனாதிபதி அடிக் கடி பௌத்த ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், 70-வது பிறந்த தினத்தை அண்மையில் கொண்டாடிய மகிந்த, மறுதினம் இலங்கையின் புகழ்பெற்ற யோகாசன பயிற்சியாளரான நந்த சிறிவர்தனவிடம் யோகா பயிற்சி பெறும் புகைப்படம் ஒன்றை அவரது புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனது முகநூலில் பதிவேற்றியுள்ளார்.
யோகா ஆசிரியரான நந்த சிறிவர்தனவின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து, நாமல் ராஜபக்ஷ நேற்று இந்த பதிவை செய்துள்ளார்.
எனதும் எனது தந்தையின் யோகா குருவான நீங்கள், எனது பிள்ளை களின் யோகா குருவாக இருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த் தனை என நாமல் ராஜபக்ஷ அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here