கட்டார் சென்று நாடு திரும்பிய எனது மகனை காணவில்லை : பரிதவிக்கும் தந்தை!

0
138

F454f0dfdfகட்டார் நாட்டுக்கு தொழிலுக்காகச் சென்று புத்தி சுவாதீனம் காரணமாக அங்கிருந்து திருப்பியனுப்பப்பட்ட தனது மகனைக் காணவில்லை என மட்டக்களப்பு வவுணதீவைச் சேர்ந்த தந்தையான சாமித்தம்பி நவரெட்ணம் கட்டுநாயக்க  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த 12ஆம் திகதி தனது மகன் நவரெட்ணம் குணராஜா கட்டாரிலிருந்து அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை  வந்தடைந்தார். அவருடன் வந்த நண்பரை விட்டுவிலகி வெளியில் சென்றுள்ளார்.

இதுதொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளிடம் விசாரித்து போது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும் தனது மகன் விமான நிலையத்தை விட்டு வெளியேறியமை தொடர்பான சி.சி.டிவி. காட்சி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் இறுதியில்  கட்டாருக்கு  தொழிலுக்காக சென்ற என்னுடைய மகன் புத்தி சுவாதீனமாகியுள்ளதாகவும் அவர் நாட்டுப்கு திருப்பி  அனுப்பப்படவுள்ளதாகவும் அவருடைய நண்பர் மூலம் அறிந்தேன். அதன் பின்னர் கடந்த  வெள்ளிக்கிழமை மாலை எனக்கு அவர் தொலைபேசியில் அழைத்து என்னுடைய மகன் நாடு திரும்பியுள்ளதாக அறிவித்தார்.

நான் அன்றிரவு புறப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கே விமான நிலையம் செல்ல முடிந்தது. அப்போது என்னுடைய மகன் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்து விமான நிலையத்தை விட்டு வெளியேறி விட்டார் என மூலம் தெரிந்து கொண்டேன்.

அதன் பின்னர் விமான நிலையப் பொலிசார், அதிகாரிகளிடம் விசாரித்த போது எவ்வித பயனில்லாமல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தேன்.

பின்னர் வவுணதீவு பொலிஸ் நிலையத்துக்கும் அறிவித்தேன். இருந்த போதும் என்னுடைய மகன் இதுவரையில் கிடைக்கவில்லை. எனவே கொழும்பிலோ வேறு எங்காவது என்னுடைய மகனைக் கண்டால் எனக்கு என்னுடைய 0779424185 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ, பொலிஸ் நிலையத்துக்கோ அறிவிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

கூலித் தொழில் செய்யும் நான் என்னுடைய குடும்ப நிலைமை காரணமாகவே மகனை வெளிநாட்டுக்குத் தொழிலுக்காக அனுப்பினேன் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here