பிரான்சில் உள்ள தமிழ்ச்சோலைப் பள்ளிகளின் முத்தமிழ் விழா கடந்த சனிக்கிழமை சவினி லுத்தொம் பகுதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்ற இந் நிகழ்வில் இன்னியம் அணிவகுப்புடன் விருந்தினர்கள் மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
தமிழ்ச்சோலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தன.
இந்நிகழ்வில் பெற்றோர், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் அரங்கில் அமர்ந்து ஆர்வத்துடன் நிகழ்வுகளை கண்டுகளித்ததைக் காணமுடிந்தது.