வடக்கு மாகாணசபையின் 2016 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் நிறைவேறியது!

0
596

vada
வடக்கு மாகாண சபையின் 2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் அனைவரது ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் கல்வி அமைச்சுக்கு முன்னிருமை கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற விவாதங்களை அடுத்தே நேற்றைய தினம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் 2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்திற்கான அமர்வு நேற்று கைதடியில் உள்ள பேரவைச்செயலத்தில் நடைபெற்றது. இதன் போதே அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் [பட்ஜெட்] நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த வருடங்களின் போது மாகாண சபையின் வரவு செலவுத்திட்டம் மீதான விவாதம் மூன்று நாட்களாக நடைபெறுவது வழக்கம், ஆனால் இம்முறை முதல் தடவையாக நான்கு நாட்கள் வரவு செலவு திட்டம் மீதான விவாதம் இடம்பெற்றுள்ளது. இதன் போது பல சுவாரசிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

வரவு செலவு திட்டம் மீதான விவாதங்கள் கடந்த இரண்டு நாட்களாக இரவு எட்டு மணியளவு தாண்டியும் நடைபெற்றுள்ளது. வடக்கு மாகாண முதல் அமைச்சரது அமைச்சு, கல்வி அமைச்சு விவசாய அமைச்சு, சுகாதார அமைச்சு என்பன உறுப்பினர்களின் எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கான பல நல திட்டங்கள் அனைத்து அமைச்சினதும் அமைச்சுக்களும் ஒதுக்கியுள்ளன. கடந்த வருடங்களிலும் பார்க்க 2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் மக்கள் நல சார்பு திட்டங்களை கொண்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவரும் கூறியுள்ளார். குறிப்பாக மீன்பிடி அமைச்சினை அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி, சுகாதாரம், மீன்பி விவசாயம் ஆகிய அமைச்சுக்களில் கைத்தொழில் சார்ந்த பெரும் திட்டங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. இது செயல்வடிவில் கொண்டுவரப்பட அனைவரினதும் ஒத்துழைப்பும் அவசியம் என அமைச்சர்கள் கோரியுள்ளனர். முதலமைச்சர் சபையில் இல்லாத காரணத்தால் அவருக்கு பதிலாக கல்வி அமைச்சர் குருகுலராஜா முன்மொழிய அனைவரது ஆதரவுடனும் எதிர்ப்பின்றி பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது.

இதன் போது நிதி ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை மாகாண சபை செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதாக எதிர்க்கட்சி தலைவர சுட்டிக்காட்டி யதனை அடுத்து, அதனை மீள பரிசீலனை செய்யுமாறும் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. நேற்றைய தினம் சபை வரலாற்றில் முதல் தடவையாக 8.30 மணிவரை நடைபெற்று இருந்தது.

இறுதியில் சபையின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தந்த அரச உத்தியோகத்தர்கள், மாகாண சபை உத்தியோத்தர்கள், பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரது செயற்பாடுகளுக்கு அவைத்தலைவர், மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் நன்றி தெரிவித்தனர். இதன் பின்னர் அடுத்த அவருடம் ஜனவரி மாதம் பன்னிரண்டாம் திகதி செவ்வாய் காலை ஒன்பது முப்பது மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here