
முன்னாள் முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளரும் தமிழினப் பற்றாளரும் இயற்கை உயிரின சூழல் ஆர்வலருமான வைத்திய கலாநிதி ஜெயகுலராஜா அவர்கள் இன்று 16.06.2024 ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவில் சாவடைந்துள்ளார்.

1983 இல் சிறிலங்கா சிங்கள கொடுஞ்சிறையில் சிறைவைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாகி உயிருடன் மீண்டவர் வைத்திய கலாநிதி ஜெயகுலராஜா அவர்கள்.
அன்று முதல் எம் மண்ணை விட்டகலாது தாயகத்திலேயே வாழ்ந்து தாயகத்தின் பணிகளுக்காகவே தன்னை அர்ப்பணித்துப் பணிபுரிந்த ஓர் உன்னத மனிதத்தைத் தமிழினம் இழந்திருக்கிறது.
இவரது குடும்பத்தினரின் துயரத்தில் நாமும் பங்குகொள்கிறோம்.