திருக்கோணேஸ்வர கட்டுமானப் பணிகளுக்குத் தடை!

0
175

.trinco_thirukooneeswaram
இலங்கையில் தேவார பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான திருக்கோணேஸ்வரர் ஆலய வளாகத்திற்குள் இடம்பெற்றுவரும் கட்டுமான பணிகளுக்கு தொல் பொருள் ஆய்வுத் தினைக்களத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆலய உள் வீதியில் தேர் வலம் வருவதற்காக ஒன்பது தூண்கள் எழுப்பப்பட்டு கூரை அமைப்பதற்கும் உத்தேசித்துள்ள ஆலய நிர்வாகம் அதற்கான கட்டுமான பணிகளை ஆரம்பித்துள்ள நிலையிலே பணிகளை இடைநிறுத்துமாறு தொல் பொருள் ஆய்வுத் திணைக்களத்தினால் தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றார் ஆலய பரிபாலன சபையின் தலைவரான பி.பரமேஸ்வரன்.
இலங்கையில் உள்ள ஐந்து ஈஸ்வரர் தலங்களில் ஒன்றான திருக்கோணேஸ்வரம் கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை நகரிலுள்ள போர்த்துக்கேயர் கோட்டைக்குள் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்திலுள்ள திருக்கோணேஸ்வரரை இராவணன் மற்றும் சோழர் மரபு வந்த குளக்கோட்டமன்னன் ஆகியோரும் வழிபட்டதாகவும் இதன் வளர்ச்சிக்காக திருப்பணிகளையும் செய்ததாகவும் ஆலய வரலாறு கூறுகின்றது.
ஆலய வளாகமும் அதனை அண்மித்த 372 ஏக்கர் நிலப்பரப்பும் தொல் பொருள் ஆய்வுத் திணைக்களத்திற்குரியது என திருகோணமலை மாவட்ட தொல் பொருள் ஆய்வுத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
அந்த பகுதிக்குள் திணைக்களத்தின் அனுமதி இன்றி எவ்விதமான கட்டுமாணப் பணிகளும் மேற்கொள்ள முடியாது என்றும் தொல் பொருள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் தான் இந்த நடவடிக்கை என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதனை நிராகரித்துள்ள ஆலய பரிபாலன சபையின் தலைவரான பி. பரமேஸ்வரன், அந்த பிரதேசத்தில் 22 ஏக்கர் நிலப்பரப்பு ஆலயதிற்கு சொந்தமானது என்றும் அந்த பகுதிக்குள் வழமை போல் ஆலய புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here