பிரான்சில் இசைவேள்வி 2024 போட்டிகள் சிறப்பாக ஆரம்பமாகின!

0
249

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் நடாத்தும் இசைவேள்வி-2024 கர்நாடக‌ சங்கீத இசைத்திறன் போட்டிகள் இன்று (15.06.2024) சனிக்கிழமை பொண்டி பகுதியில் சிறப்பாக ஆரம்பமாகியுள்ளன.

இந்நிகழ்வில் மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச்சுடரினை 20.04.1998 அன்று மணலாற்றில் வீரச்சாவடைந்த மேஜர் விடுதலை அவர்களின் சகோதரி ஏற்றிவைத்து மவர்வணக்கம் செலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டன.

இன்றைய நாளின் போட்டிகளின் நடுவர்களாக

குரலிசை ஆசிரியர்.திருவாட்டி கீர்த்தனா ஆறுமுகதாசன் அவர்கள்,
வீணை குரலிசை ஆசிரியர் திருவாட்டி நோயலா அன்ரன் இமானுவேல், தண்ணுமை ஆசிரியர் திருமிகு அந்தோனிப்பிள்ளை கொன்சலஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இப்போட்டிகள் இன்று இடம்பெறும் அதேவேளை எதிர்வரும் 22.06.2024 சனிக்கிழமை மற்றும் 23.06.2024 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு தினங்கள் பொண்டிப் பகுதியில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெறவுள்ளன.

மூன்றுநாட்களும் போட்டி நடைபெறும் இடம்: 08 Rue de la philosophie, 93140 Bondy. (RER / E Bondy – BUS (303) les marnaudes,Tram (4) les coquetiers)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here