பிலிப்பைன்ஸின் வட பகுதியைத் தாக்கிய “மெலோர்” புயலால் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தெற்கு நோக்கி புதிய புயல் அண்மித்து வருவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
வட பகுதியில் மெலோர் புயல் காரணமாக சுமார் 7 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவர்கள் வேறு இடங்களுக்கு அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில், தெற்கு நோக்கி புயல் வீசும் என அவதானித்துள்ள அதிகாரிகள் அந்தப் புயலுக்கு ஆன்யோக் என்று பெயரிட்டுள்ளனர்.
தீவுக்கூட்டங்களைக் கொண்ட நாடான பிலிப்பைன்ஸ், ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 20 கடும் புயல்களை சந்தித்து வருகிறது.
கடந்த 2013 ஆம் ஆண்டு அந்த நாட்டைத் தாக்கிய “ஹையான்’ புயலுக்கு 7,350 பேர் பலியாகினர்.