உர மானியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகளினால் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு – லிப்டன் சுற்றுவட்டத்திற்கு முன்பாக ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம், முன்னோக்கி செல்வதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வரவு செலவுத்திட்டத்தில் தமது சலுகைகள் இல்லாது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னனியின் மேல் மாகாண சபையின் உறுப்பினர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
\”பணத்திற்கு பதிலாக உரம் வேண்டும்\” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்படுகின்றது.
விவசாயிகளின் பாரம்பரிய ஆடையான கோவணத்தை அணிந்தே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஆயிரத்து 500ற்கும் அதிகமான விவசாயிகள் கலந்துக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.