குவைத்தில் இன்று காலை மங்காப்பில் உள்ள தொழிலாளர்கள் குடியிருப்புமையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 இனைத் தாண்டியுள்ளதாக உள்ளூர் அரபு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள்.. மேலும் சிகிச்சை பெற்று வரும் பலரது நிலை மிகவும் மோசமாக உள்ளது..
இவர்களின் பெயர் விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அதிகாலை நான்கு மணியளவில் மங்காஃப் பிளாக் 4 இல் உள்ள கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்தியர்களுக்கு சொந்தமான நிறுவனத்தின் ஊழியர்கள் வசிக்கும் இந்தக் கட்டிடத்தில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள்.
காயமடைந்த 21 பேர் அதான் மருத்துவமனையிலும், 11 பேர் முபாரக் அல் கபீர் மருத்துவமனையிலும், 4 பேர் ஜாபிர் மருத்துவமனையிலும், 6 பேர் ஃபர்வானியா மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கீழே தீ பரவுவதைக் கண்டு பலர் மேலே இருந்து குதித்ததால் சிலர் காயமடைந்தனர். தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் வந்து தீயை அணைத்தனர். கட்டடத்தின் கீழ் தளத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்களால் விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு படை வட்டாரங்கள் தெரிவித்தன.
(குவைத் தமிழ் சோசியல் மீடியா)