முல்லைத்தீவில் 5 ஆயிரம் ஏக்கர் காணிகள் தரிசு நிலமாக மாறியுள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு கரைதுரைப்பற்று, மற்றும் வெலிஓயா ஆகிய பிரதேச செயலளார் பிரிவுகளிலே இவ்வாறு 5 ஆயிரம் ஏக்கர் காணிகள் தரிசு நிலமாக மாறி வருகின்றன.
கடந்த கால யுத்தத்தினைத் தொடர்ந்து பல பயிற்செய்கை நிலங்கள் கைவிடப்பட்ட நிலையில் அவை பற்றைக்காடுகளாக காணப்படுகின்றன. இதேவேளை குறித்த பிரதேசங்களில் காணப்படும் சிறியளவிலான குளங்கள் புனரமைக்கப்படாமல் உள்ளமையும் இந்த நிலங்கள் தரிசு நிலமாக மாறியுள்ளமைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறாயிரம் ஏக்கர் நிலங்கள் துப்புரவு செய்யப்பட்டு பயிற்செய்கையை மேற்கொள்வதற்கு தயார்படுத்தப்பட்டுள்ளபோதும் 5 ஆயிரம் ஏக்கர் காணிகள் இதுவரை துப்புரவு செய்யப்படாமல் உள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.