முல்லைத்தீவு முள்ளிவாயக்கால் பகுதியில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட மோட்டார் சைக்கில் விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு புதுக்கடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் தினேஸ்வரன் (வயது 26) எனும் இiளைஞனே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார். அத்துடன், அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஆரியரத்னா வசந்தன் (வயது 20) எனும் இளைஞரே படுகாயமடைந்தவராவார்.
இந்தச் சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது,
குறித்த இரு இளைஞர்களும் நேற்று புதன்கிழமை இரவு 7மணியளவில் புதுக்குடியிருப்பு பிரதேசத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்த போது முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் வீதியில் தரித்து நின்ற கட்டாக்காலி மாடு ஒன்றின் மீது மோட்டார் சைக்கில் மோதியதில் இவ்விபத்துச் சம்;பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்துச் சம்வம் இடம்பெற்ற இடத்திற்கு அருகாமையில் கடற்படையின் பாதுகாப்புக் கடமையில் இருந்ததுடன், சம்பவம் இடம்பெற்ற போது கடற்படையினரே அங்கு சென்று பார்த்த போது இரு இளைஞர்களும் வீதியோர காணுக்குள் வீழ்ந்து கிடந்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த விபத்து தொடர்பில் பொலிஸாருக்கு தெரியபப்டுத்தியதுடன், அவ்வீதியூடாகச் சென்ற பொதுமக்களின் உதவியுடனும் காயப்பட்ட இருவரையும்; முல்லைத்தீவு மாஞ்சோலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
ஆத்துடன், குறித்த இளைஞர்கள் பயணித்த மோட்டர்ர சைக்கில் விபத்தினையடுத்து திடீரென தீப்பற்;றி எரிய ஆரம்பித்துள்ளது. சுமார் 15 நிமிடங்கள் வரை மோட்டார் சைக்கில் தீப்பற்றி எரிந்துள்ளதுடன், மோட்டார் சைக்கில் முற்றாக எரிந்துள்ளது.
இதேவேளை, குறித்த இரு இளைஞர்களும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லலும் வழியில் தர்மலிங்கம் தினேஸ்வரன் (வயது 26) எனும் இளைஞன் உயிழந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆத்துடன், படுகாயமடைந்த மற்றைய இளைஞன் தொடர்ந்தும் முல்லைத்தீவு மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும், தெரிவித்த முல்லைத்தீவு பொலிஸார், இந்தச் சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகளi மேற்கொண்டு வருகின்றனர்.