யாழில் பல்கலைப் பட்டத்தை பாடையில் கட்டி வீதிக்கு வந்த பட்டதாரிகள்!

0
111

பல்கலைக்கழகப் பட்டத்தை பாடையில் கட்டி, வேலையில்லா பட்டதாரிகள் நேற்று (9) யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்துப் பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வடக்கு மாகாண வேலையில்லா பட்தாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

‘பட்டம் வீட்டில்; பட்டதாரிகள் நடு ரோட்டில்’, ‘ஒரே ஒரு பரீட்சையில் பறந்து போனது பல பரீட்சை எழுதிப் பெற்ற பட்டம்’, ‘வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்’, ‘எமக்கான வாழ்க்கையை நாம் எப்போது வாழ்வது’, ‘படிப்புக்கும் போராட்டம் வேலைக்கும் போராடுவதா’, ‘எல்லோருக்கும் பாரபட்சமின்றி வேலைகளை வழங்க வேண்டும்’, ‘படித்ததற்கு கூலித்தொழிலா கடைசி வரைக்கும்’, ‘படித்தவர்கள் இந்த நாட்டின் சாபக்கேடுகளா?’, ‘பல வருட கனவு வெறும் கனவாகவே போய்விடுமா?’, ‘படித்தும் பரதேசிகளாக திரிவதா?’ என போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.

மேலும், தமது கோரிக்கைகளை அரசாங்கம் விரைந்து நிறைவேற்ற வேண்டும்; இல்லையேல் தொடர்ந்து தாம் பாரிய போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் இதன்போது தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here