யாழ்ப்பாணம் – கன்னாதிட்டி காளிகோயில் கும்பாபிஷேகத்திற்கு வந்த அடியார்களின் தாலிக்கொடி மற்றும் நகைகளை திருடிய பெண்ணொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பிராந்திய காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலின்படி கன்னாதிட்டி காளி கோயில் இந்து இளைஞர்களின் ஒத்துழைப்புடன் குறித்த பெண் ஒரு மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா பூந்தோட்டத்தில் வசிக்கும் கொழும்பு வெல்லம்பிட்டியவை சேர்ந்த 27 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
பெண்ணைக் கைது செய்து யாழ்ப்பாணம் காவல்துறை நிலையத்தில் தடுத்து வைத்து விசாரித்த பொழுது பெண்ணின் உள்ளாடைக்குள் இருந்து திருடப்பட்ட தாலிக்கொடி மற்றும் நகைகள் மீட்கப்பட்டது என காவல்நுறையினர் மேலும் தெரிவித்தனர்.
குறித்த பெண் மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணப் பிராந்திய குற்றதடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் ஆலயத் திருவிழாக்கள் ஆரம்பமாகியுள்ள நிலையில் தென்பகுதியில் இருந்து திருட்டுக் கும்பல்கள் சென்றுள்ளமை குறித்து மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.