வடக்கு மாகாணசபையின் 41ஆவது அமர்வின் இரண்டாவது நாள் அமர்வு நேற்றையதினம் கைதடியில் உள்ள வட மாகாணசபை சபா மண்டபத்தில் நடைபெற்றது. அதில் முதலமைச்சர் அமைச்சின் ஒதுக்கீடுகள் தொடர்பன விவாதத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது அமைச்சின் கீழ் உள்ளசெயற்பாடுகள் தொடர்பாக உறுப்பினர்களால் கூறப்பட்ட ஆலோசனைகள் கவனத்தில் எடுத்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்தியாவையும் இலங்கையையும் ஏன் குறைகூறுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. நாங்கள் எவரையும் குறை கூறவில்லை ஆனால் சில நாடுகள் எங்கள் குறைகளை புறக்கணித்து வருவதையும் மத்திய அரசாங்கத்துக்கு சார்பாக மட்டும் நடந்து கொள்வதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. ஏம்மை குறை கூறுவதிலும் பார்க்க மத்திய அரசாங்கத்தின் குறைகளை பரிசீலிக்க வேண்டும் என்றுதான் நாங்கள் கூறுகின்றோம்.
வடிகால்கள் மூடப்பட்டது தொடர்பாக முக்கியமான கருத்து முன்வைக்கப்பட்டது. யுத்தத்தின் போது வடிகால்கள் ஊடாக புலிகள் வருகின்றார்கள் என்ற காரணத்தினால் இராணுவம் அவற்றை மூடிவிட்டதாக கூறப்பட்டது. எனவே இங்கு சும்மா இருக்கும் இராணுவத்தைக் கொண்டே அந்த வடிகால்களை திறந்து விட அவர்களிடம் பேசவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
குhணி அபகரிப்பு மிகவும் பாரதூரமான விடயம் தொடர்ந்து இப்படியான நடவடிக்கை கொழும்பில் இருந்து வந்தவர்கள் பலர் செய்து கொண்டிருக்கிறார்கள் என தகவல்கள் எமக்கு கிடைக்கின்றன. அது தொடர்பான தகவல்களை எமக்கு வழங்குங்கள்.
உண்மையிலேயே வடக்கில் காணி அபகரிப்பு தொடர்ந்து இருப்பதற்கு காரணம் இங்கு இராணுவம் இருப்பதனால் தான். அவர்கள் இல்லையென்றால் இந்த காணி அபகரிப்பு பலகாலத்துக்கு தொடர்ந்து இருக்காது.
மேலும் சுற்றுலாத்துறை தொடர்பாக பேசப்பட்டது. இத் திணைக்களத்துக்கான நியதிச்சட்டம் அமைச்சினால் தயாரிக்கப்பட்டு பரிசீலனை செய்து வரப்படுகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் சுற்றுலாத்துறை தொடர்பான புதிய கையேடு விரைவில் வெளியிடவுள்ளோம்.
முன்பள்ளி ஆசிரியர் வெற்றிடம் தொடர்பாக எமது அமைச்சினால் சேவை பரிமான குறிப்பு தயாரிக்கப்பட்டு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன். வெற்றிடம் நிரப்பப்படும்.
அரசுடன் சேர்ந்து செயற்படுமாறு எம்மிடம் வெளிநாட்டு பிரதிநிதிகள் சிலர் கோருகின்றனர். அவர்களிடம் இராணுவத்தால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது வெளியில் இருந்து மக்களை குடியேற்றுகிறார்கள். இந்த அரசாங்கம் நாங்கள் வாக்களித்துதான் வந்தது. அவர்களுடன் சேர்ந்து செயற்படமுடியும் ஆனால் மனமாற்றம் அரசுக்கு இருக்கிறதா என்று சந்தேகம் உள்ளது. ஆதை நிவர்த்தி செய்யுங்கள் சேர்ந்து செயர்ப்படுகின்றோம் எனஅவர்களிடம் கூறியுள்ளேன் என மேலும் தெரிவித்தார்.