வவுனியா மாவட்ட செயலகத்தில் வவுனியா அரசாங்க அதிபர் தலைமையில் இன்று இடம்பெற்ற விசேட கூட்டத்தில் வவுனியாவில் 8 இடங்கள் டெங்கு அபாய வலயமாக அடையாளப்படுத்தப்பட்டன.
இதன் நிமிர்த்தம் கற்குழி, தேக்கவத்தை, தோணிக்கல், வவுனியா நகர், சூசைப்பிள்ளையார்குளம், குருமன்காடு, வைரவபுளியங்குளம், மற்றும் பூந்தோட்டம் ஆகிய இடங்களே டெங்கு அபாயமுள்ளதாக அடையாளப்படத்தப்பட்டுள்ளது.
இவ் இடங்களில் விசேட குழுக்களின் மூலம் டெங்கு பரவும் இடங்கள் அடையளப்படுத்தப்படவுள்ளதாக கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அரச திணைக்களங்களின் தலைவர்கள் மூலமாக அனைத்து அரச திணைக்களங்களில் இருந்தும் அரச உத்தியோகத்தர்களை குழுவாக நியமித்து வீடு வீடாக சென்று டெங்கொழிப்பு செயற்றிடத்தில் பங்கேற்றகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை நாளை முதல் இப்பணியை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.