அரபு நாடு ஒன்றில் பணிபுரிந்து விட்டு அண்மையில் திருகோணமலையான தனது சொந்த ஊர் திரும்பிய இளைஞர் இன்று அதிகாலை வேளை விபரீத முடிவால் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப் படுகிறது.
சில வருடங்களுக்கு முன்னர் தொழில் நிமிர்த்தம் கட்டார் நாட்டிக்கு சென்று தொழில் புரிந்து வந்துள்ளார் குறித்த இளைஞர் அண்மையில் விடுமுறையில் ஊர்திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
இன்று அதிகாலை 2:00 மணியளவில் வீட்டில் தூக்கிட்ட நிலையில சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருகோணமலை நகரப்பகுதியைச் சேர்ந்த றீகன் றேனீஸ்சான் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்
சடலம் உடல் கூற்றுசோதனைக்காக திருகோணமலை வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை திருகோணமலை
காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.