எகிப்தின் எல்லையில் ஒரு சிறிய பகுதியை, இஸ்ரேல் இராணுவம் கைப்பற்றியதை தொடர்ந்து, ஹாஸாவின் முழு நிலப்பரப்பும், இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.இஸ்ரேலிய படையினர், தாம் குறிப்பிட்ட பகுதியை கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஹாஸா பள்ளத்தாக்கிற்கும் எகிப்திற்கும் இடையில் உள்ள, 14 கிலோ மீற்றர் நீளமான பிலாடெல்பி கொறிடோரை கைப்பற்றியுள்ளதாக, இஸ்ரேலின் தலைமை இராணுவ பேச்சாளர் டானியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.
இதுவரை, இந்த பகுதி மாத்திரமே, இஸ்ரேலின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இல்லாமல் இருந்த பகுதியாகும்.இந்த பகுதி, ஹமாஸிற்கான உயிர்நாடியாக விளங்கியதாகவும், ஹாஸாவுக்குள் ஆயுதங்களை கொண்டு வருவதற்கு, ஹமாஸ் இந்த பகுதியை பயன்படுத்தியதாகவும், இஸ்ரேலின் தலைமை இராணுவ பேச்சாளர் டானியல் ஹகாரி குறிப்பிட்டுள்ளதுடன், 20 சுரங்கப் பாதைகளை அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவித்தார்