பிரான்சு நாட்டில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வு!

0
145


அமரர் நா. சி. கமலநாதன் ( முனைவர்) அவர்களின் புதல்வி மந்தாகினி குமரேஸ் ( கனடா) அவர்களின் 3 நூல்கள் வெளியிட்டு வைக்கப்பட்டது. இரைதேடும் பறவைகள் ( கவிதைகள்), புரிதல் ( வாழ்வில் கண்ட அநுபவித்த உண்மைச்சம்பவங்கள்) வள்ளியும் யஸ்மினியும் என்ற புத்தகம் ( காட்டுன் வடிவில் வளர்ந்து வரும் இளம் எழுத்தாளரும் மந்தாகினி குமரேசனின் புதல்வி ஆர்த்திகாவின் எழுத்தில் எழுதப்பட்டது ) Midnight’s Toll என்ற ( கவிதை நூல் ஆங்கிலத்திலானது) வெளியிட்டு வைக்கப்பட்டது.
பாரிசின் புறநகர்பகுதியில் ஒன்றான பொண்டி நகரத்தில் 26.05.2024 ஞாயிற்றுகிழமை பி.பகல் 4.00 மணிக்கு பொண்டி மாநகர மண்டபத்தில் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை பொண்டி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் உப தலைவர் திரு. பாஸ்கரன் அவர்கள் ஏற்றிவைக்க மாவீரர் பொதுப்படத்திற்கு ஈகைச்சுடரினை 20.04.1998 இல் வீரச்சாவடைந்த சோதியா படையணி மேஜர். விடுதலையின் சகோதரி அவர்கள் ஏற்றிவைக்க மாவீரர் பொதுப்படத்திற்கும் தனது தந்தையின் திருவுருவப்படத்திற்கு அவரின் புதல்வி மந்தாகினியும், பேர்த்தி ஆர்த்திகா மற்றும் உறவுகள் மலர் வணக்கம் செய்யப்பட்டு அகவணக்கம் செய்யப்பட்டது.
நூல் வெளியீட்டு நிகழ்வை தமிழ் ஆசிரியர் திருவாட்டி கு. சிவானி அவர்கள் செய்துவைத்தார். நூல்கள் பற்றி கருத்துரைகளை திருவாட்டி. சாந்தி சிவரூபன், திருவாட்டி. பாவலர் பொலிகையூர் கோகிலா, திரு. பாஸ்கரன் அவர்கள் வழங்கியிருந்தனர். தொகுப்புரையை திருவாட்டி விசயா செல்வநாயகம் அவர்கள் வழங்கியிருந்தனர். இத்தொகுப்பில் மந்தாகினி அவர்கள் புலம்பெயர்ந்து கனடநாட்டில் சென்று வாழ்ந்தாலும் தன்தாய்நாடுபற்றியும், தனது வாழ்வில் பட்ட அனுபவங்களை எழுத்து மூலமாக ஆவனப்படுத்தியிருப்பதையும், தான் மட்டுமல் தனது மகளையும் அதில் ஈடுபடுத்தி எழுதவைத்திருப்பதையும், இவருடைய தந்தையார் கல்வி மேம்பாட்டு பேரவையின் நூல் உருவாக்கத்தில் பெரும் பங்கை ஆற்றியிருந்தததையும், தமிழுக்காக அதன் உயர்வுக்காக ஆற்றிய பணிகளும் பகிரப்பட்டது. நூல் வெளியீட்டு சிறப்புரையை பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார். தந்தையின் வழியில் தானும் ஈடுபட்டு தனது மகளையும் ஈடுபட வைத்த நூல் ஆசிரியரையும் பாராட்டியதோடு தமிழர்கள் வரலாற்றில் பலவிதமான உண்மைகளை நாம் ஆவணமாக்க தவறுகின்றோம் என்றும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எம் வீரபுருசர்கள் கல்லிலும், மட்பாண்டங்களிலும் ஏடுகளிலும் பதித்தவைகள் தான் இன்று தமிழர்கள் நாம் யார் எமது இனம் எப்படிப்பட்டது என்று உலகிற்கு உண்மையின் சாட்சியாக தந்துள்ளது. ஆனால் இன்று நாம் வாழ்ந்த வாழ்வை கண்ட உண்மைகளை இதுபோன்று எழுதி அவற்றை வாழ்விட மொழிகளில் எம் தலைமுறையினருக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து நூல் எழுத்தாளர் மந்தாகியும், அவருடைய புதல்வி ஆர்த்திக்காவும் சிற்றுரைகளை ஆற்றியிருந்தனர். தமிழகத்திலிருந்து கவிஞர் காசிஆனந்தன் அவர்கள் அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியும் வாசித்தழிக்கப்பட்டது. நூல்களின் முதல் பிரதியை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் பெற்றுக்கொள்ள அவரைத்தொடர்ந்து தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவை, மற்றும் தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகம், தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் ,தமிழ்ச்சங்கம் சார்பாகவும் அதன் பிரநிதிகள் மற்றும் வர்த்தக சங்கத்தலைவர், எழுத்தாளர்கள், கலைஞர்கள், தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்கள், இளையோர்கள் நூல் ஆசிரியர் மந்தாகினி அவர்கள் வழங்கி வைக்க நூல்களைப் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்வின் நிறைவில் நூல் வெளியீட்டு நிகழ்வை நடாத்த உதவியவர்களுக்கும் பொண்டி தமிழ்சங்கத்தினருக்கும் வந்து கலந்து கொண்ட அனைவருக்கும் நூல் வெளியீட்டுக்குடும்பம் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.மாலை 7.00 நிகழ்வு நிறைவு பெற்றது.
(ஊடகப்பிரிவு – மக்கள் தொடர்பு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here