மீண்டும் தமிழ்மொழியை இணைக்குமாறு பிரான்சு அரசுக்கு அனுப்பும் மனுவின் செய்முறை விளக்கம்!

0
128

பிரான்சு உயர்கல்விக்கான அடிப்படைத் தேர்வில் (BAC ) மீண்டும் தமிழ்மொழியை இணைக்குமாறு பிரான்சு உயர்கல்வி அமைச்சிற்கு அனுப்பவுள்ள மனுவில் கையொப்பமிடுவதற்கான செய்முறை விளக்கத்தினையும் இணைய இணைப்பினையும் கீழே தருகின்றோம்.

இந்த மனுவில் தங்கள் கையொப்பமிடுவதற்கு இந்த இணைப்பில் தங்கள் குடும்பப்பெயர் (NOM) , பெயர்(PRENOM) , மின்னஞ்சல் (E -MAIL) , வதிவிடம்(VILLE), அஞ்சல் குறியீடு (CODE POSTALE), நாடு (PAYS ) ஆகியவற்றினைப் பதிவுசெய்து ஒப்பமிட வேண்டும். இதன்போது தங்களுக்கு ஒரு மின்னஞ்சல் கிடைக்கும். அந்த மின்னஞ்சலில் கையொப்பமிட்டதனை உறுதி செய்யும் போதே தாங்கள் இந்த மனுவில் கையொப்பமிட்டமை ஏற்றுக்கொள்ளப்படும்.

குறிப்பு : தங்களுக்கான மின்னஞ்சல் உள்பெட்டி தவிர வேறு இடங்களுக்கும் வரலாம் (SPAM, COURRIER INDESIRABLE ) என்பதனைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

தமிழுக்காய் இணைவோம்! தமிழராய் நிமிர்வோம்!

https://chng.it/sZdPz8vWcF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here