ஒரு புனித இலட்சியத்திற்காக வாழ்ந்து இந்த இலட்சியத்திற்காகப் போராடி அந்த இலட்சியத்தை அடைவதற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்த மாவீரர்கள் மகத்தானவர்கள்.”
இவர்களை நெஞ்சங்களில் நிறுத்தி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு
நேறறு : 25.05.2024 சனிக்கிழமை பி. பகல் 15.00 முதல் 18.00 மணிவரை
: 36, Av. de la Division 93000 Bobigny
பகுதியில் உணர்வோடு இடம்பெற்றது
இந்நிகழ்வில் பொதுச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் திருவாட்டி நித்தி முகுந்தினி அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக்கொடியை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வின் முக்கிய செயற்பாட்டாளர் திரு. செவ்வேள் அவர்கள் ஏற்றிவைத்தார்.
ஈகைச்சுடரினை 08.11.2012 அன்று பிரான்சில் சாவடைந்த கேணல் பரிதி அவர்களின் தாயார் ஏற்றிவைத்தார்.
மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச்சுடரினை மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினர்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து வீரவணக்கம் உறுதிப்படுத்தல் அறிக்கைகள் வாசித்தல் (மொத்தம் 15 மாவீரர்கள்) இடம்பெற்றது.
மாவீரர் சிறப்புரையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைபொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார்.
தொடர்ந்து மாவீரர் குடும்பத்திற்கு தேசியக்கொடி கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. தேசியக்கொடி இறக்கல் கையேற்றல் என்பவற்றோடு
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்தது.
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவுகண்டது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)