தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு எதிரான போராட்டம் ஓராண்டை எட்டியுள்ள நிலையில் மூன்றுநாட்கள் தொடர் போராட்டமாக இன்றும் இடம்பெற்றது.
நேற்றுமுன்தினம் புதன்கிழமை முதல் ஆரம்பித்த போராட்டம் இன்று வெள்ளிக் கிழமைவரை 3 நாட்களுக்குத் தொடர் போராட்டமாக நடைபெறும் எனவும்.
இனத்தின் இருப்பைக் காக்க அனைவரும் அணி திரள்வோம் எனவும் – தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பை ஏற்று இன்று பல கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மக்கள் திரண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
தையிட்டியில் வெறும் நாலுபேர்தான் போராட்டம் செய்கிறார்கள் எனக் குறிப்பிட்ட ஊடகங்கள், வெசாக் தன்சல்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை தையிட்டி போராட்டத்துக்குக் கொடுக்கவில்லை எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.