பப்புவா நியூ கினியாவில் உள்ள தொலைதூர கிராமத்தில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எங்க மாகாணத்தில் உள்ள காகலம் கிராமத்தில் அதிகாலை 3 மணியளவில் இந்த பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, 100 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். கிராமத்தில் அருகிலிருந்த மலைப்பகுதி சரிந்து வீழ்ந்தமையால் வீடுகள் தரைமட்டமாகியதாக கெரா பெண்கள் சங்கத்தின் தலைவர் எலிசபெத் லாருமா தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோக்களளில் குடியிருப்பாளர்கள் பெரிய பாறைகளை அகற்றுவதையும், இடிபாடுகள் மற்றும் வீழ்ந்த மரங்களின் அடியில் இருந்து உடல்களை மீட்பதையும் காணமுடிகிறது. மண்சரிவினால் பெரிய தங்கச் சுரங்கம் அமைந்துள்ள போர்கெரா நகருக்கான வீதியும் தடைபட்டுள்ளது.