பிலிப்பைன்ஸ் நாட்டை மிரட்ட வரும் சூறாவளி: 7,50,000 மக்கள் அவசரமாக வெளியேற்றம்!

0
157
8266பிலிப்பைன்ஸ் கடற்பகுதிக்கு மிக அருகில் கடுமையான சூறாவளி ஒன்று மையம் கொண்டுள்ளதால், கடலோரம் உள்ள சுமார் 7,50,000 பொதுமக்களை அவசரமாக அரசு வெளியேற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிலிப்பைன்ஸ் நாட்டின் பேரிடர் மேலாண்மை அதிகாரிகளின் எச்சரிக்கை தகவலை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலார்(நோனா) எனப்பெயரிடப்பட்ட அந்த சூறாவளியானது எந்த நேரத்திலும் கரையை கடக்கும் என்பதால், கடலோரம் உள்ள 3 மாகாணங்களை சேர்ந்த சுமார் 7,50,000 பொதுமக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மணிக்கு 150 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய இந்த சூறாவளியால் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்பதால், 40 விமானங்களின் சேவைகளை அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
மேலும் 73 பெரிய கப்பல்கள் மற்றும் நூற்றுக்கும் அதிகமான படகுகள் கடலுக்குள் அனுமதிக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது.
சமார் தீவுப்பகுதிக்கு மேற்கு பகுதியில் உள்ள படாக் என்ற கிராமப்புற பகுதியில் இந்த சூறாவளி கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரமான மனிலாவிலிருந்து சுமார் 385 கி.மீ தொலைவில் உள்ள Sorsogon வரை இந்த சூறாவளியின் தாக்கத்தை உணர முடியும் என வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here