கிளிநொச்சியில் தொடருந்து மோதி முதியவர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் கிளிநொச்சி உதயநகர் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் கிளிநொச்சி உதய நகர் கிழக்கைச் சேர்ந்த இராமசாமி பழனியாண்டி வயது 76 என்ற முதியவரே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தொடருந்தில் கிளிநொச்சி ஆனந்தபுரம் அம்மன் கோயிலுக்கு அருகாமையில் முதியவர் வீதியை கடக்க முற்பட்ட வேளையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலும் தொடருந்து பாதுகாப்பு கடவை பொருத்தப்படாத பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்றும் சம்பவ இடத்திலேயே குறித்த முதியவர் பரிதாபகரமாக உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.