ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார். அவருடன் சென்றவர்களும் உயிரிழந்ததாக அந்நாட்டு மக்களுக்கு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இப்ராஹிம் ரைசியுடன் பயணம் செய்த வெளியுறவு அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த அஜர்பைஜானை ஒட்டியுள்ள ஜல்பா நகர் மலைப்பகுதியில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.
உலங்குவானூர்தி விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இறந்ததைத் தொடர்ந்து, ஈரானின் துணை ஜனாதிபதி முஹம்மது முக்பர், அந்நாட்டு ஆன்மீகத் தலைவரின் ஒப்புதலில் பதில் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.
ஈரானிய அரசியலமைப்பின்படி புதிய ஜனாதிபதியை 50 நாட்களுக்குள் தேர்ந்தெடுக்க வேண்டும்.