ஆர்ஜென்டீனாவின் சால்டா நகருக்கருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 41 பொலிஸார் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
60 எல்லை பாதுகாப்பு படை பொலிஸாருடன் சென்ற பஸ் ஒன்றே தனது கட்டுப்பாட்டை இழந்து 50 அடி உயர பாலத்திலிருந்து கவிழ்ந்து விழுந்துள்ளது.
சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.
மோசமான வீதியில் பஸ் பயணித்ததே இந்த விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆர்ஜென்டீனா ஜனாதிபதி மவுரினா மக்ரி, நாம் நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதன் மூலமாக எதிர்காலத்தில் இது போன்ற விபத்துகளை தவிர்ப்போம் என்று கூறியுள்ளார்.