பிரான்சு‌ நெவர் நகரில் உணர்வோடு இடம்பெற்ற மே 18 தமிழின‌அழிப்பு நினைவேந்தல்!

0
185

வரலாற்றில் மறக்க முடியாத துயரம் தோய்ந்த வடுக்களும் காயங்களும் நிறைந்த மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 15 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு‌ நெவர் நகரில் உணர்வோடு இடம்பெற்றது.

நெவர் பிராங்கோ தமிழ்ச் சங்கம் மற்றும் நெவர் தமிழ்ச் சோலையும் இணைந்து இன்று இந்நினைவேந்தலை நிகழ்த்தியிருந்தனர்.

பொதுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் நினைவுத் திருவுருவப் படத்திற்கு திரு. கணேஷ் பகிரதன் அவர்கள் நினைவுச்சுடரினை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுப் படத்திற்கு அருட்தந்தை அமல் அவர்கள் மலர் வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து பள்ளி மாணவர்களால் தமிழ் மொழியிலும் பிரெஞ்சு மொழியிலும் அகவணக்கம் நிகழ்த்தப்பட்டது. பின்பு மக்கள் இனப்படுகொலை நினைவுப் படத்திற்கு மலர் வணக்கம், சுடர் வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து நிகழ்வுகள் இடம்பெற்றன.

முதலில் மாணவி கன்சிகா அவர்களால் கவிதை வடிக்கப்பட்டது . பின்னர் மாணவி றொசைனி அவர்களால் மே 18 இனவழிப்பு பற்றிய பேச்சு நிகழ்த்தப்பட்டது. அடுத்து மாணவன் என்சோ அவர்களால் மே 18 கவிதை வடிக்கப்பட்டது. தொடர்ந்து றெக்னோஷன் அவர்களால் மே 18 இனவழிப்பு நாள் பற்றிய பேச்சு பிரெஞ்சு மொழியில் பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிர்வாகி அவர்களால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தொடர்பான சிறப்புப் பேச்சு நிகழ்த்தப்பட்டது.

பின்னர் தமிழ்ச் சோலைப் பள்ளி மாணவிகள் இனப்படுகொலை பாடலுக்கு எழுச்சி நடனமாடினார்கள்.தொடர்ந்து மக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. பின்னர் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் தாரக மந்திரத்துடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here