தாயகத்தில் கடந்த மாதம் பெய்த கனமழைகாரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டனர். வெள்ள நீர் வீட்டுக்குள் புகுந்தமையினால்வீடுகளை விட்டு வெளியேறி பொது இடங்களில் பெருமளவான மக்கள் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டது. கூலித் தொழில் பாதிக்கப்பட்டு, கூலித் தொழிலாளர்களது குடும்பங்கள் நாளாந்த உணவுத்தேவையை பூர்த்தி செய்ய முடியாது நிர்க்கதி நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
விலங்கு வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பில் ஈடுபட்டவர்கள் பெருமளவு நட்டம் அடைந்து வருமானம் இழந்துள்ளனர்.
மற்றும் விவசாயம் செய்வோர் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி பாதிப்பிற்கு உள்ளான மக்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சினால் அனுப்பப்பட்ட நிதியில் இருந்து அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 87 குடும்பத்தினருக்கு தலா ரூபா 1551.00 பெறுமதியான நிவாரணப் பொருட்களும், ஸ்ராஸ்பேக் தமிழ் மக்களால் அனுப்பப்பட்ட நிதியில் இருந்து 46 குடும்பங்களுக்கு தலா ரூபா 1565.00 பெறுமதியான நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டன.