புவி மேலும் வெப்பமடைவதை தடுக்கும் நோக்கில் பாரிஸில் இடம்பெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான உச்சிமாநாட்டில் எட்டப்பட்டுள்ள உடன்பாடு உலகுக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.
கரியமில வாயுவின் வெளியேற்றத்தை இதுவரை இல்லாத வகையில் தடுக்கவும், அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேடுகளை தவிர்க்கவும், நாடுகள் உடன்பட்டுள்ளதற்கான உறுதிப்பாடு இதன்மூலம் தெரியவந்துள்ளது எனவும் அவர் கூறுகிறார்.
இனிவரும் காலங்களில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் எரிசக்தி தேவைகளை முன்னெடுக்கும் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்யவும் நாடுகள் இந்த மாநாட்டில் உடன்பட்டுள்ன என்பதை ஒபாமா சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவும், சீனவும் உடன்பாட்டை வரவேற்றுள்ளன
அனைத்து நாடுகளும் கரிமயில வாயுவின் வெளியேற்றத்தை குறைக்கவும், அதன் மூலம் இரண்டு டிகிரி செல்சியஸுக்கும் குறைவாகவே புவி மேலும் வெப்பமடையாமல் இருப்பததை தடுக்கவும் சுமார் 200 நாடுகள் உடன்பட்டுள்ளன.
உலகளவில் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் சீனா, இந்த உடன்பாடு சரித்திர ரீதியில் மிகப்பெரிய முன்னெடுப்பு என்று கூறியுள்ளது.