வானர வெ(ற்)றி ஆட்டம்…!
சொந்த மண்ணை நாம் இழந்து
சோற்றுக்கும் வழி இன்றி
பிணவாடை நடுவினிலே கந்தகக் காற்றை நுகர்ந்த படி
குருதியாற்றை கடந்த கதை நினைக்கையில் மனம் கனக்குதையா
பூ பிஞ்சு காய் கனி என எதுவென்றும் பாராமல்
வேட்டையாடியது வெறிகொண்ட வானரங்கள்
சோறில்லை சுற்றமில்லை பெற்ற பிள்ளை பசி தீர்க்க கண்டெடுத்த கறள் குவளை
பட்டினியாய் கிடக்கையிலும் பிச்சையென இட்ட பாலை பிஞ்சுமுக சிரிப்பிற்காய் முழுவதுமாய் கொடுத்த போது
சப்பாத்து காரர்களின் கந்தகக் குண்டு அது
பச்சைப்பிள்ளை மேல் விழுந்து பப்பாசிக் காயை போல் தூள் தூளாய் சிதறடித்தது.
இரக்கமின்றி எம் இனத்தை அழித்துவிட்ட வானரங்கள் செயல் தனை மீதமுள்ள கறள் குவளை உணர்த்தும்.
தமிழராய் நாம் பட்ட பேரவலம் தனை எழுதிடவோ சொல்லி அழுதிடவோ வார்த்தை இல்லை…!
நன்றி- அதிதி வாசு.