அரசியல் கைதியாக சிறையிலிருந்த எனது தந்தையைக் காணவில்லை :இரண்டாம் நாள் அமர்வில் மகன் சாட்சியம்!

0
196
8239மண்டைதீவு கடற்படை பிடித்து சென்று, சிறையில் அரசியல் கைதியாக இருந்த தனது தந்தையை காணவில்லை என மகனொருவர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் அமர்வு விசாரணைகள் நேற்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
ஆசீர்வாதம் அன்ரன் [கடத்தப்படும் போது வயது 31] என்ற எனது அப்பா குருநகரில் அமைந்துள்ள எமது வீட்டிற்கு கடற்தொழிலுக்காக 1993 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எழாம் திகதியன்று மண்டைதீவிற்கு சென்றிருந்தார். மூன்று பேருடன் சென்ற அப்பா கடலில் வள்ளத்தில் நிற்கும் போது மனடைதீவு கடற்படை அவர்களுடைய வள்ளம் நோக்கி சராமரியாக சுட்டுள்ளது.
இதில் வள்ளத்தில் இருந்த ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட அவர் கடலுக்குள் வீழ்ந்து விட்டார். ஏனைய இருவரையும் [தந்தையார் உட்பட] பிடித்த கடற்படை அவர்களை கொண்டு சென்று, அதில் மற்றொருவரை விடுவித்து விட்டானர். அனால் அப்பாவினை எங்கு சென்றனர்? என கூறவே இல்லை.
பின்பு 2003 ஆம் ஆண்டு கொழும்பிலிருந்து வெளிவரும் பத்திரிகையில் சிறைச்சாலை ஒன்றில் அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட்டம் முன்னெடுத்ததாக குறிப்பிடப்பட்டு, செய்தியொன்று வெளியாகியிருந்தது, அதில் ஒன்பது பேரின் படங்கள் போடப்பட்டிருந்தது. என்னுடைய அப்பாவும் அந்த படத்தில் இருந்தார்.
எங்கள் தந்தையை அப்போது தேடி செல்ல முடியாத நிலை இங்கு காணப்பட்டிருந்தது. ஏ ஒன்பது பாதையும் மூடப்பட்டிருந்தது. இதற்கு முன்னர் 2002 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் 512 ஆவது படைப்பிரிவை சேர்ந்த இராணுவத்தினர் மோட்டார் சைக்கிளில் எமது வீட்டிற்கு வந்து அப்பா சிறையிலிருந்து தப்பியோடி விட்டதாக கூறினார்கள்.
இதன்  பின்னர் சிறையிலிருந்து வந்த ஐந்து சந்தியினை சேர்ந்த ஒருவர் எனது அப்பாவை முகாம் ஒன்றிற்குள் கண்டதாக எம்மிடம் கூறியிருந்தார். பின்பு ஒருமுறை கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிலும் அப்பா சிறையில் உள்ளது போன்ற படம் செய்தியாக பிரசுரமாகியிருந்ததாகவும். அவருடைய மகன் அன்ரன் சுதர்சன் தெரிவிக்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here