பிரான்சு பாரிசின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான கார்ஜ் சார்சல் பகுதியில் மாவீரர் லெப்ரினன்ட் சங்கர் அவர்களின் நினைவுத்தூபி அமைக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் நிறைவுதினமான இன்று (17.05.2024) வெள்ளிக்கிழமை பிற்பகல் 18.30 மணியளவில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நினைவேந்தல் நிகழ்வு ஒன்று பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் கார்ஜ் சார்சல் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பொதுச்சுடரினை கார்ஜ் நகர பிதா திரு. பெனுவா ஜூமினெஸ் (M.Benoit Juminez) அவர்கள் ஏற்றிவைத்தார், பிரெஞ்சுத் தேசியக்கொடியை சார்சல் நகரபிதா திரு. பேட்ரிக் ஹடாட் (Patric HADDAD) அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை சார்சல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.கார்லோஸ் மார்த்தேன் பிலொன்கோ (Carlos Martens Bilongo) அவர்கள் ஏற்றிவைத்தார்.
ஈகைச் சுடரினை மாவீரர் இளந்தேவன் அவர்களின் சகோதரனும் கார்ஜ் சார்சல் தமிழ்ச் சங்கத் தலைவருமான திரு. டக்ளஸ் அவர்கள் ஏற்றிவைத்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து மலர் வணக்கம் இடம்பெற்றது.
லெப்ரினன்ட் சங்கர் அவர்களின் திருஉருவப் படத்திற்கான மலர்மாலையை மாவீரர் குடும்பத்தைச்சேர்ந்த திரு. ரொனி மரிசலின் அவர்கள் அணிவித்தார்.
நினைவுத் தூபிக்கு முன்பாக விருந்தினர்கள் அனைவரும் மலர்வளையம் வைத்து வணக்கம் செலுத்தினர்.
நினைவுரைகளும் இடம்பெற்றன.
சார்சல் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் திரு. கார்லோஸ் (M.Carlos Martens Bilongo) 2. சார்சல் நகர பிதா திருஏற்றிக் கடாட் அவர்கள்(M.Patrick Kaddad)
கார்ஜ் நகர பிதா திரு. பெனுவா ஜிமினஸ் அவர்கள் (Benoit Juminez)
திரு. செட்றிக் சபுரே M. Cedric Sabouret அவர்கள்,
திரு. மேத்தா அவர்கள் (தமிழர் ஒருங்கிணைப்பக் குழு – பிரான்சு)
திரு. மத்தியாஸ் டக்கிளஸ் அவர்கள்
திரு. திருச்சோதி அவர்கள் (தமிழீழ மக்கள் பேரவை)
திரு. ரொனி மரிசலின் அவர்கள் (மாவீரர் குடும்பம்)
ஆகியோர் மலர் வணக்கம் செய்ததைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் மலர்வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து கார்ஜ் சார்சல் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. டக்ளஸ் அவர்கள் வரவேற்புரையை வழங்கினார். அதனைத் தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றன.
திரு. திருச்சோதி அவர்கள் (பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை),
சார்சல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. கார்லோஸ் பிலென்கோ அவர்கள்
கார்ஜ் நகர பிதா திரு .பெலுவர் ஜிமினஸ் அவர்கள்,
திரு. செட்றிக் சபுரே அவர்கள்,
திரு.மேத்தா அவர்கள் (தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு)
சார்சல் நகர பிதா திரு.பற்றிக் கடாட் அவர்கள்,
ஆகியோரின் நினைவுரைகளைத் தொடர்ந்து திரு தசரதன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
தொடர்ந்து கொடிகள் இறக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
சிறப்பு நிகழ்வாக முள்ளிவாய்க்கால் இறுதி வார நாட்களை நினைவு கூரும் முகமாக கலந்துகொண்ட அனைவருக்கும் இலைக்கஞ்சி வழங்கப்பட்டது.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடனும் நிகழ்வு நிறைவுகண்டது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)
: