ரஷ்ய மனநல மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து: பரிதாபமாக பலியான 23 நோயாளிகள்!

0
144

8249ரஷ்ய நாட்டில் உள்ள மனநல மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி 23 நோயாளிகள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவின் Voronezh நகருக்கு அருகில் Alferovka என்ற கிராமப்பகுதி உள்ளது.

சுமார் 700 குடிமக்கள் மட்டுமே வசித்து வரும் இந்த பகுதியில் 140 மனநல நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை அமைந்துள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு இந்த மருத்துவமனையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலை பெற்று விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர கடுமையாக போராடியுள்ளனர்.

மருத்துவமனையின் கூரை மீது ஏறி தீயை அணைக்கு முயன்றபோது, கூரை உடைந்து விழுந்து தீயணைப்பு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.

எனினும், முயற்சியை கைவிடாமல் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தபோதிலும், மனநல மருத்துவத்தில் இருந்த சுமார் 23 நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

பலத்த தீக்காயங்கள் அடைந்திருந்த எஞ்சிய நோயாளிகளை வீரர்கள் பாதுகாப்பாக வெளியேற்றி வேறொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இரவு நேரத்தில் மருத்துவமனையில் எவ்வாறு திடீரென தீவிபத்து ஏற்பட்டது என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் Novgorod நகரில் உள்ள மனநல மருத்துவமனையிலும், மாஸ்கோ நகரில் உள்ள மனநல மருத்துவமனையிலும் தீவிபத்து ஏற்பட்டு 75 நோயாளிகள் பலியானது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here