நஷ்டஈடுகள் எவையும் வேண்டாம் பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள் :சாட்சிகளுடன் உறவுகள் குமுறல்!

0
182
CVr9VxpW4AA8ky9[1]எமக்கு நட்டஈடு எவையும் வேண்டாம் தயவுசெய்து எங்களு டைய பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் என காணாமல் போனோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
தமது உறவுகள் காணாமல் ஆக் கப்பட்டதற்கான சாட்சியமாக உறவினர்களால் தெரிவிக்கப்படும் இரா ணுவ முகாம்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் மீது விசாரணைகள்  மேற்கொள்ளப்படும் என காணா மல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நேற்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் போதே  ஆணைக்குழு இவ்வாறு தெரிவித்துள்ளது.
நேற்றையதினம் மாவட்ட செயலகத்திற்கு காணாமல் போனோர் தொடர்பாக சாட்சியம் அளிப்பதற்காக வருகை தந்தவர்களில் பலர் கூடுதலாக 1996 ஆம் ஆண்டு காலப் பகுதி யில் இருந்த யாழ். நகர் பகுதியில் 512 ஆவது படைபிரிவில் கடமையாற்றிய இராணுவ அதிகாரிகளே தங்களது பிள்ளைகளை பிடித்து சென்றதாகவும் தாங்கள் சென்று கேட்கும் போது ஒவ்வொரு நாளும் விடுவதாக கூறு வார்கள். ஆனால் நாங்கள் சென்று ஏமாற்ற த்துடன் திரும்பி வருவதுதான் வழக்கமாக இருந்தது.
அதன் பின்னர் இன்று வரை தங்களு டைய பிள்ளைகளை காணவில்லை எனவும் குறித்த இராணுவமுகாமில் இராணுவ அதிகாரியாக கடமையாற்றிய“லலித் கேபா” என்ற இராணுவ உயர் அதிகாரியே தங்களு டைய பிள்ளைகளை விசாரணை என்றும், வேறு காரணங்களுக்காகவும் அழைத்து சென்றதாக கூறியிருந்தனர்.
அத்துடன் கைதடி, நாவற்குழி, உடுவில், பூமாங்குளம் இராணுவ முகாம்கள் போன்ற வற்றிலும் தங்களுடைய பிள்ளைகள் இருக் கின்றார்கள் எனகண்ணால் கண்டவர்கள் கூறியிருக்கின்றார்கள். நாங்கள் சென்று கேட்ட போதும் அவர்கள் அங்குதான் இருப்பதாக இராணுவத்தினர் கூறியிருந்தனர். ஆனால் பின்னர் இரண்டொருநாட்களில் அங்கே இல்லை எனவும் கூறுகின்றனர்.
எமக்கு நஷ்டஈடு எவையும் வேண்டாம். தயவுசெய்து எங்களுடைய பிள்ளைகளை மீட்டுத் தருமாறு காணாமல் போனவர்களு டைய உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த ஆணைக் குழுவினர், மக்கள் அடையாளம் காட்டும் இரா ணுவ முகாம்கள் மற்றும் அதிகாரிகள் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் மரண சான்றிதழ்கள் வழங்கப்பட்டாலும் அவர்கள் தொடர்பான விசாரணைகள் மேற் கொள்ளப்படுமென தெரிவித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here