மகனை தேடியறிவது கடினம் நஷ்டஈடாக காணியும் பணமும் :ஜனாதிபதி ஆணைக்குழு பதிலளிப்பு!

0
516
8234உங்களது மகனை தேடியறிவது கடினம். ஆகவே மரணச் சான்றிதழை பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு, காணாமல் போகச்செய்யப்பட்ட மகனின் தாய் ஒருவருக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இருப்பதற்கு வீடும், காணியும், ஒரு இலட்சம் ரூபாய் பணமும் தருவதாகவும் ஆணைக்குழுவினர் நேற்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அமர்வில் அந்தத் தாயிடம் கூறியுள்ளனர்.
1995-ம் ஆண்டு நாம் இங்கிருந்து இடம் பெயர்ந்து வன்னிக்கு சென்றிருந்தோம். இதன் போது எனது ஒரேயொரு மகனான கந்தசாமி சசிதரன் வயது 17 என்பவரும் வந்திருந்தார். அங்கு சென்று கிளிநொச்சியில் குடியமர்ந்தோம். எனது மகன் கிளிநொச்சி தபால் நிலையத்திற்கு அருகில் சைக்கிள் கடை ஒன்றினை போட்டு நடத்தி வந்தார்.
இவ்வாறு இருக்கும் போது 1998 ஆம் ஆண்டு திடீரென எனது மகன் வேலை நேரத்தில் காணாமல் போய்விட்டார். எனது மகன் எங்கு உள்ளார். என்ன செய்கின்றார். என்று இதுவரை எனக்கு தெரியவில்லை. எனது மகனை கண்டறிய கோரி அனைத்து ஆணைக்குழுக்களிலும் முறைப்பாடு செய்திருந்தேன்.
ஆனாலும் கிடைக்கவில்லை, தற்போது எனது மகனை தேடி கண்டுபிடிப்பது கடினம்; மரண சான்றிதழினை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி ஆணைக்குழுவினர் அறிவுறுத்தி உள்ளனர். அத்தோடு காணி, வீடு மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் தருவதாக கூறியுள்ளதாகவும் அந்த தாய் தெரிவித்தார்.
இதே போல் வட்டுவாகலில் வைத்து தனது மகனை காணாது சாட்சியமளித்த தாய் ஒருவருக்கும் இவ்வாறு பணம் மற்றும் வீடு தரு வதாக ஜனாதிபதி ஆணைக்குழு கூறிய போதிலும், எனது மகனின் பெறுமதி ஒரு இலட்சம் ரூபா தானா? என அந்த தாய் ஊடகங்களிடம் கதறியழுது தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here