பயங்கரவாத தடைச்சட்டதை நீக்குமாறுகோரி யாழ்ப்பாணத்தில் கையெழுத்து சேகரிக்கும் போரட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சர்வமதகுழுவின் அழைப்பின் பேரில் ஆலயங்கள், தேவாலயங்கள், விகாரைகள் மற்றும் பள்ளிவாசல்கள் ஆகிய இடங்களிலிருந்து மக்களிடம் கையெழுத்து பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு பல்வேறு தரப்பினராலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அரசாங்கம் இதுவரை தடையை நீக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது