பிரான்சு வில்நெவ் நகரில் மே 18 தமிழின அழிப்புக்கு நீதிகோரிய கவனயீர்ப்பு நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வில்நெவ் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினால் இன்று (15.05.2024) புதன்கிழமை பிற்பகல் 14.00 மணிமுதல் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வில்நெவ் தமிழ்ச்சோலை மாணவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு சுடர்ஏற்றி, மலர்வணக்கம் செலுத்தினர்.
நிறைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.







