பிரான்சு திரான்சி நகரில் இடம்பெற்ற தமிழின அழிப்பின் 15 ஆம்‌‌‌ ஆண்டு நினைவேந்தல்!

0
281

பிரான்சு திரான்சி நகரில் மே 18 தமிழின அழிப்புக்கு நீதிகோரிய கவனயீர்ப்பு நிகழ்வு‌ பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் திரான்சி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினால் இன்று (15.05.2024) புதன்கிழமை பிற்பகல் 15.00 மணிமுதல் இடம்பெற்றது.

பொதுச்சுடரை திரான்சி நகரபிதா Mme. Aude Lagarde, (Maire de drancy ) அவர்கள் ஏற்றிவைத்தார்.

ஈகைச்சுடரினை முள்ளிவாய்க்காலில் வீரச்சாவடைந்த மேஜர் பாரதியின் சகோதரி ஏற்றிவைக்க , 09.06.1991 அன்று வீரச்சாவடைந்த 2 ஆம் லெப். மாணிக்கத்தின் சகோதரி மலர்வணக்கம் செலுத்தினார்.

தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து நினைவுரைகள், திரான்சி தமிழ்ச்சோலை மாணவ மாணவியரின் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு தொடர்பான கவிதை, பாடல், நடனம் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன.

திரான்சி மாநகரசபையின் சார்பில்

Mme. Aude Lagarde, Maire de drancy
M. Jean-Christophe Lagarde, ancien Maire de drancy
M. Hamid Chabani, Chargé des sports et conseiller départemental
M. Michel Lastapis, responsable des logements ஆகியோர் கலந்துகொண்டு சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தியதுடன் நினைவுரைகளையும் ஆற்றியிருந்தனர்.

நிறைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here