தென் இந்தியாவில் வழக்கத்திற்கு மாறாக அதிகமான மழைப்பொழிவு காணப்பட வாய்ப்பு உள்ளதாகவும், அது மாசி மாதம்வரை நீடிக்கும் என்றும் ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பசிபிக் கடலில், குறிப்பாக பூமத்திய ரேகை பகுதியில், கடல் பரப்பிலும் அதன் மேல் பகுதியில் உள்ள வான் பரப்பிலும், வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம் தான் எல் நினோ. El Niño-Southern Oscillation (ENSO) என்பது இதன் விரிவாக்கம்.
இதன் தாக்கத்தால்தான் தமிழகத்தில் மழை கொட்டியுள்ளது என்பதை ஐ.நா. தற்போது உறுதி செய்துள்ளது. ஐ.நா. இன்று வெளியிட்டுள்ள ஒரு கருத்தரிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போது ஆசியா மற்றும் பிசிப்பிக் பகுதியில் நிலைக் கொண்டு உள்ள ‘எல் நினோ’ அமைப்பானது 2016ம் ஆண்டு தொடக்கம் வரையில் நீடிக்கும். எனவே எச்சரிக்கைக்காக, வானிலை மாற்றத்தினால் வரும் ஆபத்தை கட்டுப்படுத்த நீண்ட கால உத்திகளை எடுக்க வேண்டும், பிராந்திய ஒற்றுமை தேவை.
2015-2016 கால கட்டத்தில் எல் நினோ பாதிப்பானது மத்திய மண்டல பகுதிகளில் கடுமையாகலாம், கம்போடியா, மத்திய மற்றும் தெற்கு இந்தியா, கிழக்கு இந்தோனேஷியா, மத்திய மற்றும் தெற்கு பிலிப்பைன்ஸ், மத்திய மற்றும் வடகிழக்கு தாய்லாந்து பகுதிகளில் தாக்கம் அதிகமாக இருக்கும்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில், குறிப்பிடாக இந்தியா மற்றும் இலங்கையில் கனமழை காரணமாக அதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்படும். பசிப்பிக் தீவுகளான பபுவா நியூ கினியா, திமோர்-லேஸ்டே, வானுவாட் உள்ளிட்டவற்றில் வறட்சி காணப்படும், தண்ணீர் பற்றாக்குறை மற்றும் உணவு இன்மைக்கு காரணமாகும்.