வவுனியா பெரிய கோமரசன் குளம் பகுதியில் அமை ந்துள்ள கல்வீரன்குளம் உடைப்பெடுக்கும் நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்களால் அச்சம் தெரிவிக் கப்படுகின்றது.
கல்வீரன்குளம் சேதமடை ந்து உடைப்பெடுக்கும் தறு வாயிலுள்ளது. இக்குளத்திற்கு அருகில் இருந்து வந்த சுமார் 50 வருடங்கள் பழைமை வாய்ந்த ஆலமரம் ஒன்று நேற்று முன்தினம் அதிகாலை அடியோடு சாய்ந்து குளத்தினுள் விழுந்துள்ளது.
இதனால் அதன் கட்டுக்கள் உடைந்து சேதமடைந்து காணப்படுகின்றன. இதனை யடுத்து குளம் உடைப்பெடுக்கும் அபாய நிலையை எட்டியுள்ளது.
நீண்டகாலமாக இக் குளம் புனரமைக்கப்படாமல் இருந் தமை தொடர்பில் சம்பந்தப் பட்ட திணைக்களம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப் பினர்கள் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்த போதிலும் புனரமைப்ப தற்கான எவ்வித நடவடிக்கை யும் மேற் கொள்ளப்படவில்லை என பொதுமக்களால் சுட்டிக்காட் டப்படுகின்றது.
இதேவேளை ஏனைய பகுதிக ளில் உள்ள குளங்கள் புனர மைக்கப்பட்ட போதிலும் இக்கு ளம் புனரமைக்கப்படாது இருப்பது ஏன் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அத்துடன் இக்குளம் உடைப்பெடுக்குமாயின் குளப் பகுதிக்கு கீழ் வசிக்கும் 75 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படுவதுடன் விவசாய நிலங்களினுள் நீர் வழிந்தோடி பாதிப்பை ஏற்படுத்துமென அப்பகுதி விவசாய குடும்பங்கள் தெரிவிக்கின்றன.
மேற்படி குளத்தில் ஏற்பட்டுள்ள அசம்பாவித நிலையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரு வதற்காக விவசாயதிணைக் களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலைய உத்தியோகத்தர்கள் மேற்படி பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.
எனவே துரிதகதியில் இக்குள புனரமைப்பு பணியினை மேற்கொள்ள உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.