பிரான்சு பாரிசின் மூன்று முக்கிய நகரங்களில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (15.05.2024) புதன்கிழமை பிற்பகல் இடம்பெறுகின்றன.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் குறித்த பகுதிகளின் பிராங்கோ தமிழ்ச் சங்கங்கள் நிகழ்வை நடாத்தவுள்ளன.
திரான்சி, வில்நெவ் சென்ஜோர்ஜ், சுவாசிலுரூவா ஆகிய நகரங்களிலேயே முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் இடம்பெறவுள்ளது.
ஏற்கெனவே பிரான்சின் பல நகரங்கள், தமிழ்ச் சோலைப் பள்ளிகளில் நினைவேந்தல் இடம்பெற்று வருகின்றன.
எதிர்வரும் மே 18 அன்று பிற்பகல் 14.00 மணிக்கு பாரிஸ் Place de la République சதுக்கத்தில் இருந்து Place de la Bastille நோக்கி பேரணியாகப் பறப்பட்டு பஸ்ரில் பகுதியில் வணக்க நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை அன்றையதினம் செவ்ரோன் மற்றும் கிளிச்சி பகுதிகளிலும் , பிரான்சின் ஏனைய மாவட்டங்களிலும் குறித்த நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய இனமே!
நந்திக் கடலோர முள்ளி வாய்க்கால் மண்ணில் விதைக்கப்பட்ட எங்கள்
தேசத்தின் உயிர் விதைகளுக்கு விளக்கேற்றி எங்கள் விடுதலைத் தாகம் சுமந்து இலட்சிய வேட்கையுடன் எழுவோம். எங்கள் தலைவன் வரித்த பிரபாகரம் என்னும் தமிழீழ சித்தாந்த சிந்தனையை
உங்கள் நெஞ்சமதில் சுமந்து, 18/05/24 சனி பி.ப 13.00 மணிக்கு Place de la République சதுக்கத்தில் தமிழினவழிப்பிற்கான நீதிக்கான பேரணியில் அணிதிரண்டு வாருங்கள் என பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுத்துள்ளது.