பிரான்சு இவ்றி சூர் சென் பிரதேசத்தில் மே 18 தமிழின அழிப்புக்கு நீதிகோரிய கவனயீர்ப்பு நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இவ்றி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினால் இன்று (14.05.2024) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 17.30 மணிமுதல் 18.30 மணிவரை இடம்பெற்றது.
இவ்றி சூர் சென் துணை நகர முதல்வர்
ஜனநாயகம் குடிமக்கள் கூட்டம் சமூக வாழ்க்கை பொறுப்பாளர்
(Mr Bernard Prieur
Maire adjoint d’Ivry-sur-Seine
Responsable de Démocratie Assemblée citoyenne Vie associative)
அவர்கள் மற்றும் உதவியாளர்களும் கலந்து கொண்டு சுடர் ஏற்றி, மலர்வணக்கம் செலுத்தியிருந்தனர். அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தியிருந்தனர்.
முள்ளி வாய்க்கால் தொடர்பான நினைவுரைகளும் இடம்பெற்றன.
முள்ளிவாய்க்காலில் இறுதிவரை பயணித்த உறவுகளை இழந்த ஒரு தந்தை கண்ணீர் மல்க தனது அனுபவத்தையும் பகிர்ந்தமை அனைவரையும் கண்கலங்க வைத்தது.
எதிர்வரும் மே 18 அன்று அனைவரும் கலந்து கொள்ளவேண்டியதன் அவசியம் பற்றியும் உணர்த்தப்பட்டது.
நிறைவாக அனைவருக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
நாளை பிரான்சில் திரான்சி, சுவாசி லு ரூ வா, வில்நெவ் சென் ஜோர்ஜ் ஆகிய இடங்களில் குறித்த கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- ஊடகப்பிரிவு)