2009 ஆண்டு சிறிலங்கா பேரினவாதிகளால் முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட தமிழினப்படுகொலையை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு மற்றும் குருதிக்கொடை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வு இன்று (14.05.2024) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட நுழைவாயிலில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில், இறுதிக்கட்டப் போரின் போது தமிழ் மக்களின் உயிர்காத்த உணவான முள்ளிவாய்க்கால் கஞ்சி விரிவுரையாளர்கள், ஊழியர்கள், மாணவர்களினால் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவேந்தி குருதிக் கொடை நிகழ்வும் இன்று (14.05.2024) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் கட்டடத் தொகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.