யாழ். தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியின் முன் முள்ளிவாய்க்கால் நினைவூர்திப் பவனி ஆரம்பம்!

0
63

யாழ். தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஈகைச் சுடரும் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டதுடன் , வீதியில் சென்ற மக்களுக்கும் கஞ்சி வழங்கப்பட்டது.

தொடர்ந்து , முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனி ஆரம்பமானது. குறித்த ஊர்தி பவனி ஆனது, நாளை திங்கட் கிழமை தென்மராட்சியிலும், 14ஆம் திகதி வடமராட்சியிலும், 15ஆம் திகதி கோப்பாய், மானிப்பாய், நல்லூர் பிரதேசங்களிலும், 16ஆம் திகதி வட்டுக்கோட்டையிலும், 17ஆம் திகதி வேலணையிலும், 18ஆம் திகதி காரைநகரிலும் பயணிக்கும்.

இறுதிநாள் நினைவேந்தல் சங்கானை பேருந்து தரிப்பிடத்தில் மாலை 5 மணிக்கு இடம்பெறும்.

முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி தங்கள் பிரதேசங்களுக்கு வரும்பொழுது மக்கள் அணிதிரண்டு ஆத்மார்த்தமாக அஞ்சலிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here