முதல்வர் சி.வி.யை குற்­ற­வா­ளிக்­கூண்டில் ஏற்ற முற்­ப­டு­வது பொருத்­த­மற்­ற­தாகும்: சுரேஷ் பிரே­மச்­சந்­திரன்!

0
192

suresh mpதமிழ்த்­ தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை மை கடந்த காலத்தில் கொண்­டி­ருந்த கொள்­கை­யி­லி­ருந்து தற்­போது வில­கி­யி­ருக்­கின்­ற­தாக பொது­மக்கள் கரு­து­கின்­றனர். இதனால் எமது பிரச்­சி­னைகள் மீது அதீத அக்­கறை கொண்ட வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனை தலை­மை­யேற்­கு­மாறு கோரு­கின்­றனர். அவ்­வா­றி­ருக்­கையில் தமது குறை­பா­டு­களை வெளிப்­ப­டுத்­தாது முத­ல­ மைச்­சரை குற்­ற­வாளிக் கூண்டில் ஏற்ற முய ல்­வது பொருத்­த­மற்­ற­தென தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­யான ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்­துள்ளார்.

மட்­டக்­க­ளப்­பிற்கு விஜயம் செய்­துள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் நேற்று முன்­தினம் மாவட்ட அலு­வ­ல­கத்தில் கட்சி உறுப்­பி­னர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டலில் பங்­கேற்­றி­ருந்தார். இதன்­போது வடக்கு முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் தலை­வ­ரா­கலாம். அது அவ­ரது உரிமை. அதனை தீர்­மா­னிப்­பது கட்­சியும் மக்­க­ளு­மே­யாகும் என்­ப­துள்­ளிட்ட பல­வி­ட­யங்­களை குறிப்­பிட்­டி­ருந்தார். இவ்­வி­டயம் தொடர் பில் கருத்து வெளியி­டு­கை­யி­லேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித் தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தற்­போது வடக்கு முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் பத­விக்­காக போட்டி போடும் ஒரு­வ­ராக சித்­தி­ரிக்­கப்­பட்டு வரு­கின்றார். அது­தொ­டர்­பி­லான கருத்­துக்­களும் வெளி ப்ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. அவை அனை த்­துமே உண்­மைக்கு புறம்­பா­ன­வை­யாகும். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரின் தலை­மையில் நடை­பெ­றக்­கூ­டிய விட­யங்கள் எவ்­வாறு முன்­னெ­டுக்­கப்­ப­டு ­கின்­றன. எவ்­வி­த­மான கொள்­கை­களின் அடி ப்­ப­டையில் விட­யங்கள் நடை­பெ­று­கின்­றன என்­பதே தற்­போது எழுந்­தி­ருக்கும் பிரச்­சி­னை­யாக காணப்­ப­டு­கின்­றது.

விசே­ட­மாக தமிழ் அர­சியல் கைதிகள் விட­யத்தில் எவ்­வா­றான விட­யங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. கைதி­க­ளுக்கு பொது ­மன்­னிப்பு வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென் ­பதில் எவ்­வ­ளவு தூரம் உறு­தி­யாக உள்­ளா ர்கள். காணிகள் விடு­விப்பு, மீள்­கு­டி­யேற்றம் தொடர்­பாக அர­சாங்­கத்­த­ரப்­பி­ன­ருடன் எவ்­வாறு விட யங்கள் கையா­ளப்­ப­டு­கின்­றன. தற்­போது வரையில் எவ்­வா­றான முன்­னேற்­றங்கள் ஏற்­பட்­டி­ரு­க்கின்­றன. வரவு செலவுத்­திட்­டத்­திற்கு எந்த அடிப்­ப­டையில் ஆத­ரவு வழங்கும் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது உள்­ளிட்ட பல கேள்­விகள் காணப்­ப­டு­கின்­றன.

இதற்கு உரிய பதி­ல­்கள் கிடைக்­க­வில்லை. இதன் கார­ணத்­தா­லேயே கூட்­ட­மைப்பின் தலைமை மீதும் அவர் சார்ந்து செயற்­படும் ஒரு­சிலர் மீதும் மக்கள் விம­ர்­ச­னங்­களை முன்­வைக்­கின்­றார்கள். அத்­தோடு தமது பிர ச்­சி­னைகள் குறித்து உறு­தி­யான நிலைப்­பாட்­டுடன் பேசு­ப­வர்­க­ளுக்கு மக்கள் ஆத­ர­வ­ளிக்­கின்­றார்கள்.

முன்­ன­தாக வடக்கு முதல்வர் தலை­மை யில் இலங்­கையில் நடை­பெற்­றது ஒரு இனப்­ப­டு­கொ­லையே என்ற தீர்­மா­னம் வடக்கு மாகாண சபையில் நிறை­வேற்­றப்­பட்­டது. அதன் பின்னர் அதற்கு எதி­ரான கருத்­துக்­களே கூட்­ட­மைப்பின் தலை­மை­யாலும் அவர்­ சார்ந்­த­வர்­க­ளாலும் உள்­நாட்­டிலும் வெளிநாட்­டிலும் வெளியிடப்பட்டன். அதே­போன்று சர்­வ­தேச விசா­ர­ணையை வலி­யு­றுத்­தி­யி­ருந்த போதும் அதற்கும் எதி­ரான கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டன.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இவ்­வி­ட­யங்­களில் முதலில் வைத்­தி­ருந்த கொள் ­கைக்கும் தற்­போது கொண்­டி­ருக்கும் கொள் கைக்கும் பலத்த வேறு­பாடு காணப்­ப­டு­கின்­றது. இதனால் பாதிக்­கப்­பட்ட மக்­ க­ளுக்கு நீதி வேண்டும் அவர்­க­ளது எதிர்­காலம் பாது­காப்­பா­ன­தாக நிரந்தர அமை தியுடன் அமையவேண்டும் என்பதற்காக உறுதியாக இருப்பவர்களின் செயற்பாடு களை திசைமாற்றும் வகையில் தற்போது கூட்டமைப்பின் தலைமையால் கருத்துக் கள் வெளிப்படுத்தப்படுகின்றன. கூட்டமைப் பிற்குள் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வைக் கண்டு மக்கள் விடயங்களில் உறுதியான நிலைப்பாடுகளை வெளிப்ப டுத்துவதற்கு பதிலாக அவற்றை மையப் படுத்தி செயற்படும் முதலமைச்சரை குற்ற வாளிக்கூண்டில் ஏற்ற முற்படுவது பொருத் தமற்றதாகும் என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here