முள்ளிவாய்க்கால் 15ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 11.05.2024 சனிக்கிழமை பி.பகல் 16.00மணிக்கு பொண்டி மாநகரசபை முன்பாக அங்குவாழ் தமிழ்மக்களாலும்,பிராங்கோ தமிழ்ச்சங்கம் பொண்டியாலும் வெகுசிறப்பாக நினைவுகூரப்பட்டது. நிகழ்வில் இளையோர்கள், சிறுவர்கள், பெண்கள் எனப்பலர் பங்குபற்றியிருந்தனர்.
பொண்டி மாநகர முதல்வர் ஸ்ரிபன் ஏர்பே அவர்கள் மற்றும் துணைமுதல்வர் கலந்து கொண்டதுடன் முள்ளிவாய்க்கால் திருவுருவப்படத்திற்கு சுடர் வணக்கம் மலர் வணக்கமும் செய்திருந்தனர். இளையவர் தமிழீழத்தின் முள்ளிவாய்க்கால் அவலத்தையும் இதற்கு சர்வதேசமே உனது நியாயமான தீர்வு தமிழீழ மக்கள் எமக்கு கிடைக்க வேண்டும் என்று பிரெஞ்சு மொழியில் தெரியப்படுத்தியிருந்தனர். விடுதலை நடனங்கள், கவிதைகள் வாசித்தளிக்கப்பட்டது.














