பிரான்சு நுவாசிலே செக் நகரில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

0
145

“முள்ளிவாய்க்கால்” பேரவலத்தின் 15ஆவது ஆண்டு நீங்காத நினைவாக பிரான்சில் பல்வேறு நகரங்களில் நினைவேந்தல் நிகழ்வுகளும்,கவனயீர்ப்புப் போராட்டங்களும் நடைபெற்றுவருகின்றன. இன்று 11 ஆம் நாள் பிரான்சு பாரிசின் புறநகர் பகுதியான நுவாசிலே செக் என்னும் நகரத்தில் பி.பகல் 15.00 மணிக்கு மாநகர நூற்பாலையின் முன்பாக நடைபெற்றது.

அப்பிரதேசத்தில் வாழும் மக்கள் தமிழ்ச்சோலை மாணவர்களுடன் மாநகர முதல்வர் ஒலியின் அவர்கள், துணைமுதல்வர் மற்றும் மாநகர உறுப்பினர் எனப் பலர் கலந்துகொண்டதுடன் தமிழ்மக்களின் உணர்வுகளுக்குத் தான் மதிப்பளிப்பதாகவும். அவர்களின் நீதிக்கான அரசியல் ரீதியான வெற்றிக்காகத் துணையிருப்பேன் என்றும் கூறியிருந்தார். தமிழர்களின் காலத்தின் தேவையான பல்வேறுபணிகள் காத்திருப்பதாகவும் அதில் எதிர்வரும் மே 18 மாபெரும் பேரணி காலத்தின் அவசியம் எனவும் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here