பிரான்சு பொபினிப் பகுதியில் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு கவனயீர்ப்பு ஒன்றுகூடல் இன்று 11.05.2024 சனிக்கிழமை பொபினி மாநகர மண்டபத்தில் காலை 11.00 மணிக்கு நினைவுகூரப்பட்டது.
நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்ப்பட்டதைத் தொடர்ந்து சுடர் வணக்கத்தையும், மலர் வணக்கத்தையும் மாநகர முதல்வர் அப்துல் கலி அவர்களும், துணை முதல்வர் தீபிந்தர் சிங் அவர்களும்,தமிழ்ச்சங்கக்கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு. பாலன் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறுப்பாளர் ஆகியோர் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து மக்களும் மலர்வணக்கம் செய்தனர்.
இன்றைய தமிழீழதேசத்தின் நிலவரத்தைப், புலம் பெயர் தமிழ்மக்களும் செய்ய வேண்டிய பணிபுரியும் தமிழிலும், பிரெஞ்சு மொழியிலும் நினைவரை நிகழ்த்தியிருந்தார்கள்.












