
யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனில் காவலாதுறை விரட்டிச் சென்ற உந்துருளியில் பயணித்த ஒருவர் மின் கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.
புன்னாலைக்கட்டுவனில் நேற்று (10) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றது..
பலாலி போக்குவரத்து பிரிவு காவல்துறை கடமையில் இருந்த போது, நிறுத்தாமல் சென்ற உந்தூருளி ஒன்றை விரட்டிச் சென்ற போது இந்த அனர்த்தம் நிகழ்ந்தது
சுன்னாகம் காவல்துறை பிரிவிலுள்ள பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பழைய தபால் நிலைய வீதி, கோப்பாய் தெற்கு என்ற முகவரியில் வசிக்கும் பிரதீபன் (வயது 41) என்பவரே உயிரிழந்தவராவார்.
காவல்துறையினர் அந்த உந்துருளியை விரட்டிச் சென்று, உதைந்து விழுத்தியதாகவும், அதன்போது உந்துருளியில் பயணித்தவர் மின் கம்பத்தில் மோதி விழுந்ததாகவும் பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அந்த இடத்தில் பொதுமக்கள் குழுமியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.